விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

விஸ்வகர்மா சனாதன தர்ம அறகட்டளை மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறகட்டளை இணைந்து 15.11.2016 அன்று மகாபலிபுரம் கான்ப்ளுயன்ஸ் ரிசார்டடில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தெலுங்கானா சபாநாயகர் திரு சிரிகொண்ட .மதுசூதன சாரி மற்றும் திரு.சீனிவாசாச்சாரி கர்நாடக மாநில தேர்தல் ஆனையர் தலைமையில் மற்றும் மைக்ரரோமேக்ஸ் நிர்வாகி திரு பி எல் சாஸ்திரி அவர்களின் முன்னிலையில் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற தீபா கர்மாகர் அவருடைய பயிற்சியாளர் திரு பிஸ்வேஸ்வர் நந்தி,செஸ் க்ரான்ட் மாஸ்டர் திரு ஆர் ஆர் லக்ஷ்மன்,அர்ஜுன விருது பெற்ற குத்து சண்டை வீரர் மந்தீப் ஜாங்ரா,குத்து சண்டை வீரர் பிங்கி ஜாங்ரா,காது மற்றும் வாய் பேச முடியாதவர் பிரிவில் ஆசிய அளவில் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற சுவாதி ஜாங்கிட்,அர்ச்சனா ஜாங்கிட் மற்றும் குல்ஷன் ஜாங்ரா,பார்வதி ஜாங்கிட், கலிந்தி ஷர்மா,ஷோபா டிப்னிஸ் கவுரவிக்கப்பட்டனர்.