செயல்பாடுகள்
- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மேட்டுப்பாளையம் மற்றும் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 19.12.2024 to 20.12.24 தொழில்துறை வேளாண் காடுகளின் கூட்டமைப்பு (CIAF) குறித்த ஏழாவது ஆண்டு ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் , “சிறந்த வேளாண் காடு வளர்ப்பு விவசாயி விருது-2024” என்ற விருதை சேயோன் ஆர்கானிக் பண்ணையின் தலைவர் திரு த முருகசெல்வத்துக்கு வழங்கியது.
- 20.12.2023 அன்று சனிப்பெயர்ச்சி பூஜைக்காக பொங்கு சனீஸ்வரர் கோவிலில் 1000 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
- புது தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற உயிரி எரிபொருள் உச்சி மாநாட்டில், சேயோன்
ஆர்கானிக் ஃபார்முக்கு 2023-ஆம் ஆண்டின் ஆர்கானிக் சிறந்த தொழில் முனைவோர் விருது-பசுமை விருது வழங்கப்பட்டது
- 2022 ஆம் ஆண்டிற்கான ட்ரீ வாரியர்ஸ் விருது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் இயற்கை வேளாண்மையில் சிறந்த மருத்துவப் பண்ணை மற்றும் வேளாண் காடுகளின் விரைவான வளர்ச்சிக்கான பங்களிப்புக்காக வழங்கப்பட்டது
- இந்தியாவின் சிறந்த மருத்துவ தாவரங்கள் பண்ணையாக எங்கள் பண்ணைக்கு கந்தர்வனா விருது வழங்கபட்டது.இயற்கை விவசாயத்தில் பங்களிப்பிற்காக கர்நாடக மாநில முதல்வரும் சாண்டல்வுட் சொசைட்டி ஆஃப் இந்தியாவும் சேர்ந்து இந்த விருது எங்கள் பண்ணைக்கு வழங்கப்பட்டது.
- விஸ்வகர்மா சனாதன தர்மா அறக்கட்டளை மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை இணைத்து விஸ்வகர்மா ஜெயந்தி பூஜை 14.09.2019 அன்று நாமக்கல் மாவட்டம் M. D. சேயோன் தோட்டதில் நடைபெற்றது அதில் அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் திரு D.முருக செல்வம் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. இலவச மருத்தவ முகாம்.மற்றும் அன்னதானமும் நடைபெற்றது.
- அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு
D.முருகசெல்வம் அவர்கள் மற்றும் தெலுங்கானா சபாநாயகர் திரு சிரிகொண்ட மதுசசூதன சாரி அவர்களும் உடுப்பி கடபாடி படுகுதடியர், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீமத் ஜகத்குரு அனேகுண்டி மகாசமஸ்தான் சரஸ்வதி பீடம் நடத்திய விழாவில் கலந்து கொண்டு கவுரவிக்கப்பட்டனர். இந்த விழா 25.09.2018 அன்று நடைபெற்றது.
- விஸ்வகர்மா சனாதன தர்மா அறக்கட்டளை மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை இணைத்து விஸ்வகர்மா ஜெயந்தி பூஜை 16.09.2018 அன்று நாமக்கல் மாவட்டம் சேயோன் ஹாலில் நடைபெற்றது அகில சபாவின் தலைவர் திரு
D.முருக செல்வம் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது அதில் மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இலவச மருத்தவ முகாமும் நடத்தபட்டது.அன்னதானமும் வழங்கப்பட்டது.
- அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு D.முருகசெல்வம் அவர்கள் 18.08.2018 அன்று நடந்த உழவு நாயகன் விருதுகள் 2018 விழாவில் சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்வதற்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார் . இதில் இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து இயற்கை விவசாயம் செய்யும் பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த விழா மதுரையில் லக்ஷ்மி சுந்தரம் ஹாலில் நடைபெற்றது.
- டிஜிட்டல் கேமரா தொழில்நுட்பம்
- அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு D. முருக செல்வம் அவரின் ஷஷ்டியப்தபூர்த்தி விழாவில் எடுத்த புகைப்படம் இந்தியா ஷாமன் தக் இதழில் வெளியானது.
- Felicitation Ceremony ஜூலை 20 2018 நடைபெறும்
- அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு D.முருக செல்வம் அவர்கள் NGO ENTREPRENEURSHIP -Eminent Philanthro என்ற பிரிவிஇல் ஜேப்பியார் ஐகான் அவார்ட் பெற்றார்.
- அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு D.முருக செல்வம் அவர்கள் திரு. அஜய் தம்தா, Minister of State for Textile சந்தித்து அவரின் ஷஷ்டியப்தபூர்த்தி விழாவிற்கு அழைப்பிதழ் கொடுத்தார்..
- அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு Dr.D.முருக செல்வம் அவர்கள் திரு. மகேஷ் ஷர்மா, அமைச்சரை சந்தித்தார்.
- அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு D.முருக செல்வம் அவர்கள் 17.04.2018 அன்று நடந்த தெலுங்கான நாள் விழாவில் கவுரவிக்கப்பட்டார் இந்த விழா தெலுங்கானா சபாநாயகர் திரு சிரிகொண்ட மதுசசூதன சாரி அவர்கள் தலைமையில் நடந்தது . இதில் இந்தியா முழுவதும் இருந்து பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- விஸ்வகர்மா சனாதன தர்மஅறக்கட்டளை மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை இணைத்து நடத்திய இலவச பொது மற்றும் எலும்பு மூட்டு மற்றும் நீரிழிவு மருத்துவ முகாம் 28.04.2018 அன்று விஸ்வகர்மா சமூக மக்கள் மன்றம் கம்பத்தில் அறக்கட்டளையின் தலைவர் திரு D.முருக செல்வம்அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்குகொண்டு பயனடைந்தனர்.
- சஅகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு Dr.D.முருக செல்வம் அவர்கள் சார்பாக திருகொல்லிக்காடில் 19.12.2017 அன்று நடந்த சனிபெயர்ச்சி விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பத்தாயிரத்திற்கும் மேலான பக்தர்கள் உணவு உண்டு மகிழ்ந்தனர்
- சென்னை அடையார் கேட் கிரௌன் பிளாசாவில் 24.9.17 அன்று அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு Dr.D.முருக செல்வம் அவர்கள் தலைமையில் அர்ஜுன விருது வாங்கிய விளையாட்டு வீரருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது அதில் மருத்துவர் திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் கௌரவிக்க பட்டார் இவரருக்கு மாநில அரசின் சிறந்த மருத்துவருக்கான விருது இவரது சேவைக்காக வழங்கபட்டுள்ளது.
- சென்னை அடையார் கேட் கிரௌன் பிளாசாவில் 24.9.17 அன்று அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு D.முருக செல்வம் அவர்கள் தலைமையில் அர்ஜுன விருது வாங்கிய விளையாட்டு வீரருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது அதில் மருத்துவம் பயிலும் மாணவி ஆர்த்தி அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
-
சென்னை அடையார் கேட் கிரௌன் பிளாசாவில் 24.9.17 அன்று அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு D.முருக செல்வம் அவர்கள் தலைமையில் அர்ஜுன விருது வாங்கிய விளையாட்டு வீரருக்கு பாராட்டு விழா நடதப்பட்டது அதில் கடல்துறை பொறியியல் பயிலும் மாணவன் திரு அருண் பாண்டி அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
-
மத்திய அரசின் அர்ஜுன விருது பெற்ற இந்திய ஹாக்கி அணி விளையாட்டு வீரர் திரு SV சுனில் மற்றும் செல்வி ரஜினி - இந்திய ஹாக்கி அணியின் மகளிர் பிரிவு கோல் கீபர் கவுரவிக்கும் விழா , மற்றும் மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா ,கல்வி ஊக்கப் பரிசு விழா, விஸ்வகர்ம பூஜையுடன் தொடங்கி சென்னை அடையார் கேட்கி கிரௌன் பிளாசாவில் 24.9.17 அன்று விஸ்வகர்மா சனாதன அறக்கட்டளையின் தலைவர் D.முருக செல்வம் சிறப்பாக நடத்தி விஸ்வகர்ம சமுதாயத்தினரை சிறப்படைய செய்தார்.
-
நமது அகில பாரத விஸ்வகர்ம மகாசபாவின் தேசகம்பம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் அகில பாரத விஸ்வகர்மா மகாசபாவின் தலைவர் D.முருக செல்வம் அவர்களின் தலைமையில் 6.12.2017 அன்று நடைபெற்றது ABVM மாநில நிர்வாகிகள் மற்றும் விஸ்வகர்மா மக்கள் கலந்து கொண்டனர்.
- விஸ்வகர்மா சனாதன தர்ம அறகட்டளை நிறுவனர் தலைவர் டாக்டர் திரு. D.முருக செல்வம் - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
- 08.02.2017 அன்று பெங்களூரில் ஸ்ரீ விஸ்வகர்மா திருக்கோவில் கும்பாபிஷேகம் ,தெலுங்கானா மாநில சபாநாயகர் திரு சிரிகொண்ட மதுசூதன சாரி அவர்கள் முன்னிலையிலும்,அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு.D முருகசெல்வம் ஆச்சாரி அவர்கள் தலைமையிலும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
- விஸ்வகர்மா சனாதன தர்ம அறகட்டளை மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறகட்டளை இணைந்து 15.11.2016 அன்று மகாபலிபுரம் கான்ப்ளுயன்ஸ் ரிசார்டடில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தெலுங்கானா சபாநாயகர் திரு சிரிகொண்ட .மதுசூதன சாரி மற்றும் திரு.சீனிவாசாச்சாரி கர்நாடக மாநில தேர்தல் ஆனையர் தலைமையில் மற்றும் மைக்ரரோமேக்ஸ் நிர்வாகி திரு பி எல் சாஸ்திரி அவர்களின் முன்னிலையில் விழா நடைபெற்றது.
- நமது அறக்கட்டளை 14 மற்றும் 15 நவம்பரில் நடத்தவிருக்கும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளும் ஒலிம்பிக் ஹாக்கி விளையாட்டு வீரர் திரு சுனில் அவர்களை பெங்களூரில் நமது ABVM தேசிய தலைவர் டாக்டர் திரு. D.முருக செல்வம் ஆச்சாரி சந்தித்து பாராட்டி வாழ்த்தினார்.
- ABVM விஸ்வகர்மா கூட்டம் 23.10.2016 அன்று டில்லியில் நடைபெற்றது அதில் நமது ABVM தேசிய தலைவர் டாக்டர் திரு. D.முருக செல்வம் ஆச்சாரி மற்றும் தெலுங்கானா சபாநாயகர் திரு சிரிகொண்ட .மதுசூதன ஆச்சாரி மற்றும் திரு பி எல் சாஸ்திரி மைக்ரோமக்ஸ் மற்றும் விஸ்வகர்மா ஜாங்கிட் அசோசியேஷன் மற்றும் Dr B L ஜாங்கிட் AIIMS மருத்துவமனை திரு ஓரி லால் மற்றும் திரு தினேஷ் கலந்து கொண்டனர்.
- சென்னை எழும்பூர் ராஜா முத்தைய்யா மண்டபத்தில் 19.10.2016 அன்று நடந்த நடிகை திருமதி ஜெயசித்ரா அவர்களின் மகன் திருமண விழாவிற்கு தெலுங்கானா சபாநாயகர் திரு சிரிகொண்ட .மதுசூதன ஆச்சாரி மற்றும் நமது அகில பாரத விஸ்வகர்ம மகாசபாவின் தேசியத் தலைவர் டாக்டர் D.முருக செல்வம் ஆச்சாரி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விழாவை சிறப்பித்தார்.
- நமது அகில பாரத விஸ்வகர்ம மகாசபாவின் தேசியத் தலைவர் டாக்டர் D.முருக செல்வம் ஆச்சாரி அவர்களின் 19.10.2016 அன்று நடந்த உறவினர் இல்ல நிச்சயதார்த்த விழாவிற்கு தெலுங்கானா சபாநாயகர் திரு சிரிகொண்ட மதுசூதன ஆச்சாரி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தார்
- விஸ்வகர்மா ஜெயந்தி விழா 16.10.2016 அன்று ஓசூர் சென்னிஸ் மகாலில் நடைபெற்றது அதில் அகில பாரத விஸ்வகர்மா மகாசபாவின் தேசிய தலைவர் டாக்டர் திரு.D.முருக செல்வம் ஆச்சாரி மற்றும் திரு.சீனிவாசாச்சாரி கர்நாடக மாநில தேர்தல் ஆனையர் மற்றும் திரு பிரபாகரன் விஸ்வகர்மா சிமோக மாவட்ட அனையர் மற்றும் திரு B P கணிராம் தலைவர் பொது பணி ஆணையகம் கர்நாடகம் மற்றும் திரு சுபாஷ் சந்திர போஸ் செயல் தலைவர் ABVM மற்றும் தங்கவேல் மாநில செயல் தலைவர் ABVM அவர்களும் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- பெங்களூரை சேர்த்த V R டைமண்டஸ் அவர்களின் இல்லத் திருமண விழா 2.09.2016 அன்று நடைபெற்றது, அதில் நமது அகில பாரத விஸ்வகர்ம மகாசபாவின் தேசியத் தலைவர் டாக்டர் D.முருக செல்வம் ஆச்சாரி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விழாவை சிறப்பித்தார்.
- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் திரு. முருகேசன் ஆச்சாரி AVM தங்கமளிகை அவர்களின் புதல்வி நிச்சியதார்தம் 4.9.16 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் நமது அகில பாரத விஸ்வகர்ம மகாசபாவின் தேசியத் தலைவர் டாக்டர் D.முருக செல்வம் ஆச்சாரி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விழாவை சிறப்பித்தார்.
- அகில பாரத விஸ்வகர்ம மகாசபாவின் தலைவர் திரு. D.முருக செல்வம் ஆச்சாரி அவர்கள் 20.08.2016 அன்று ஸ்ரீ கிருஷ்ணா சமாஜ் நடத்திய ஷோபா ரத யாத்திரைக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் அதில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் திரு ப்ரதீப் ஜாவடேகர் கொடி அசைத்து யாத்திரையை துவக்கி வைத்தார்.
- அகில பாரத விஸ்வகர்ம மகாசபாவின் தலைவர் திரு. D.முருக செல்வம் ஆச்சாரி அவர்கள் 20.08.2016 அன்று ஸ்ரீ கிருஷ்ணா சமாஜ் நடத்திய ஷோபா ரத யாத்திரைக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் அதில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் திரு ப்ரதீப் ஜாவடேகர் கொடி அசைத்து யாத்திரையை துவக்கி வைத்தார்.
- கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஸ்ரீ விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் 18.08.2016 அன்று நடத்திய ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழாவிற்கு நமது அகில பாரத விஸ்வகர்மா மகாசபா ABVM தேசிய தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
- போடியில் 14.08.2016 அன்று நடந்த போடிநாயகனுர் விஸ்வகர்மா தொழிலாளர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட திரு கே.பி.சிவம் அவர்கள் நினைவு கல்வி அறக்கட்டளையின் 14-ஆம் ஆண்டு கல்வி உதவி வழங்கும் விழாவிற்கு நமது அகில பாரத விஸ்வகர்மா மகாசபா ABVM தேசிய தலைவர் திரு. D.முருக செல்வம் ஆச்சாரிதிரு. D.முருக செல்வம் ஆச்சாரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
- கம்பம் ஆதி சுஞ்ஜனகிரி மகளிர் கல்லூரியில் 15.08.2016 அன்று நடந்த 70-தாவது சுதந்திர தின விழாவில் நமது அகில பாரத விஸ்வகர்ம மகாசபாவின் தேசிய தலைவர் திருப்பணி செம்மல் திரு. த.முருகசெல்வம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். நமது அகில பாரத விஸ்வகர்ம மகாசபாவின் தேசிய தலைவர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.அனைவரும் சுதந்திர தின உறுதிமொழி ஏற்றனர்.
- ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் ABVM விஸ்வகர்மா மாநில நிர்வாகிகள் கூட்டம் 3/08/2016 அன்று நடைபெற்றது அதில் நமது ABVM தேசிய தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் டாக்டர் திரு. D.முருக செல்வம் ஆச்சாரி அவர்கள் கலந்து கொண்டார்.
- அகில பாரத விஸ்வகர்மா மகாசபா ABVM தேசிய தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் டாக்டர் திரு. D.முருக செல்வம் ஆச்சாரி அவர்கள் 8.8.2016 அன்று திருப்பதியில் நடந்த டில்லி காளிதாஸ் அவர்களின் மகன் திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
- நலத்திட்ட உதவிகள்
- CEC மாவட்ட நிர்வாகிகள் ABVM தலைவரை வாழ்த்தினார்கள்.
- அகில பாரத விஸ்வகர்மா மகாசபாவின் (ABVM) தேசிய தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் திரு. D.முருக செல்வம் ஆச்சாரி அவர்களின் பிறந்த நாள் விழா 23.7.16 அன்று மிக சிறப்பாக மதுரை திரு P T R ராஜன் கம்மொமொரேஷன் டிரஸ்ட் ஹால் சொக்கிகுளத்தில் சிறப்பாக நடைபெற்றது.
- ெலுங்கானா சபாநாயகர் திரு சிரிகொண்ட .மதுசூதன சாரி மற்றும் திரு.சீனிவாசாச்சாரி கர்நாடக மாநில தேர்தல் ஆனையர் மற்றும் திரு பிரபாகரன் விஸ்வகர்மா சிமோக மாவட்ட அனையர் கர்நாடக மாநிலம் மற்றும் திரு B P கணிராம் தலைவர் பொது பணி ஆணையகம் கர்நாடகம் Dr ஸ்ரீனிவாச ராவ் வருமானவரி ஆணையர் மற்றும் Prof B G திலக், இயக்குனர் சஞ்சய் காந்தி இன்ஸ்டிடியுட் ஆப் டிராமா அண்ட் ஆர்தோபபீடிக்ஸ் பெங்களுரு கர்நாடக மாநிலம் மற்றும் திரு மாணிக்கம் விஸ்வகர்மா மூத்த விஞ்ஞானி BARC,மைசூர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் விஸ்வகர்ம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தி மகிழ்ந்தனர்.
- அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுகி ஓம் விராட் விஸ்வபிரம்மா சமேத ஸ்ரீ காயத்ரி தேவி திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் திருவிழா தேனீ மாவட்டம், கம்பல்.
- நமது ABVM தலைவர் மற்றும் பொது செயலாளர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் தெலுங்கானவில் நடந்த இரண்டவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
- நமது ABVM தலைவர் மற்றும் பொது செயலாளர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் சமூகம் மற்றும் சமுதாய பொது சேவை ABVM மூலமாக செயல்படுத்தி உள்ளார் என்பதை கர்நாடகாவில் தின செய்தித்தாளில் வந்த செய்தி.
- 3.6.16 அன்று ABVM சார்பாக தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள விஸ்வ கர்மா மகாஐன சங்கம் அலுவலகம் கட்ட பூமிபூஐை மற்றும் விஸ்வகர்மா மக்களை ஒறுங்கினைக்கும் கூட்டம் ஏற்பாடு செய்யப்படது.
இதில் ஏபிவிஎம் தேசயத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் டாக்டர் த. முருக செல்வம் தலைமை ஏற்று மாநில தலைவர் பி. தங்கவேல் மற்றும் மாநில,மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு இவ்விழா சிறப்பித்தனர்.
- நமது அகில பாரத விஸ்வகர்ம மகாசபா தேசியதலைவர் மற்றும் தேசிய பொது செயலாளர் திரு.த.முருகசெல்வம் அவர்களின் நேர்காணல் தமிழின் நம்பர் 1 பெண்கள் இதழ் அவள் விகடன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. வெளிடும் நாள் இன்று : 17.05.2016
- கோயம்புத்தூரில் நடந்த கூட்டத்தில் நமது ABVM பொதுச்செயலாளர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். ABVM உறுப்பினர்கள் அனைவரும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். கூட்டத்தில் விஸ்வகர்மா மக்களுக்கான செயல் திட்டங்கள் மற்றும் தேர்தல் குறித்து கருத்துக்களை விவாதித்தனர்.என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிர்றோம்.
- நமது அகில பாரத விஸ்வகர்ம மகாசபா தேசியதலைவர் மற்றும் தேசிய பொது செயலாளர் திரு.த.முருகசெல்வம் அவர்களின் நேர்காணல் துக்ளக் மாதஇதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- திருப்பணிச்செம்மல் டாக்டர் திரு.D.முருகசெல்வம் அகில பாரத விஸ்வகர்மாமகாசபை ABVM தேசிய தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் அவர்கள் திருதர்மலிங்கம்நாகம்மாள் கல்வி அறக்கட்டளையின் முலம் பெங்களுர் அருகில் அமைய இருக்கும் ஸ்ரீவீரபிரம்மேந்திரர்சுவாமிக்கு ஆலயம் அமைக்க உபயம் செய்து 18.2.16 அன்று ABVM குழுவினருடன் திருப்பணிகளை பார்வையிடார்.
- திருப்பணிச்செம்மல் D.முருகசெல்வம் ABVM தேசியத்தலைவர் அவர்கள் 17.2.16 அன்று நடந்த கர்நாடகமாநிலம் ஹரேமாதனஹள்ளி குருபூஐயின்போது அங்கு ஸ்ரீவிராட்விஸ்வகர்மா ஆலயபணிக்குமுழுவதுமாக உபயம் செய்துதரஓப்புதல் அளித்துபூமிபூஐைநடந்ததையடுத்து ஸ்ரீசுக்ஞானமூர்த்தியிடம் ஆசிவாங்கியதும்.
- வீர பிராமனகாரு கோவில் நமது அகில பாரத விஸ்வகர்மா மகாசபா தலைவர் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் திரு த முருகசெல்வம் அவர்களால் தேவனஹல்லி நந்தி ஹில்ஸில் கர்நாடகத்தில் காட்டபடுகிறது.
-
கர்நாடகத்தில் உள்ள விஸ்வகர்ம மடத்தில் நடந்த குருபூஜையில் நமது அகில பாரத விஸ்வகர்மா மகாசபா தலைவர் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் திரு த.முருகசெல்வம் அவர்கள் விஸ்வகர்மா கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
-
தெலுங்கான சட்டசபை சபாநாயகர் திரு. மதுசூதன ஆச்சாரி, அவர்கள் வில்லிவாக்கத்தில், உள்ள மெடிக்கல் பவுண்டேசன், டயக்நோஸ்டிக் சென்டரை பார்வை இட வருகை தந்திருநதார். இன் நிகழ்ச்சியில் எங்கள் அகில பாரத விஸ்வகர்ம மகாசபா தலைவர் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் திரு த.முருகசெல்வம் அவர்கள் தலைமையேற்றார்.
- புதுவை ஆனந்தா இன் ஹால் வளாகத்தில் 24.1.2016 அன்று நடைபெற்ற உலக செம்மொழி தமிழ்ப் பல்கலைக்கழகம், லண்டன் நடத்திய விழாவில் கலந்து கொண்டு கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற அகில பாரத விஸ்வகர்மா மகாசபா தலைவர் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் திரு த.முருகசெல்வம் அவர்களுக்கு ABVM சர்பாக ABVM ஊறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்
- கர்நாடகத்தில் உள்ள அரிமதனஹல்லி விஸ்வ பிராமன மடத்தில் விஸ்வகர்ம கோயில் கட்ட உள்ளனர் அக்கோவிலின் வாஸ்து பூஜைக்கு நமது அகில பாரத விஸ்வகர்மா மகாசபா தலைவர் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் திரு த.முருகசெல்வம் அவர்கள் தலைமை தாங்குகிறார்.
- நமது ABVM தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் செல்பூர் பூபாளபல்லி அருகில் 600 MW தெர்மல் ஸ்டேஷன் திறப்பு விழாவில் தெலுங்கான ஸ்பீக்கர் மற்றும் நமது தலைவர் சிறப்பு விருந்தினாக கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
- நமது ABVM தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு இலவசமகா அரிசி, மளிகை பொருள், குழந்தைகளுக்கு பால் பவுடர், ரொட்டி மற்றும் காய்கறிகள் அனைத்தும் நமது yrsk மெடிக்கல் பௌண்டேஷேன் மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் அறகட்டளை மூலமாக திரு. D. முருகசெல்வம் அவர்கள் இலவசமாக பொது மக்களுக்கு வழங்கினார்.
- சிறப்பு பொது & கண் மருத்துவ முகாம் ஓரகடம் , சென்னை 15.12.2015 (திங்கள்)
- கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கத்தில் வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நமது ABVM தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் அரகட்டளை மூலமாக முகாம் நடந்துவருகிறது.நமது yrsk மெடிக்கல் பௌண்டடின் மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அரகட்டளை நடத்துகிறது.
-
நமது ABVM தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கொளத்தூர் பொது மக்களுக்கு இலவசமகா அரிசி, மளிகை பொருள், குழந்தைகளுக்கு பால் பவுடர் மற்றும் காய்கறிகள் அனைத்தும் நமது yrsk மெடிக்கல் பௌண்டேஷேன் மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் அறகட்டளை மூலமாக திரு. D. முருகசெல்வம் அவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
- 11/12/2015 காஞ்சிபுரம் மாவட்டம் எறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நமது Abvm தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்களின் வெள்ளத்தில் பதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ நமது அரகட்டளை yrsk மெடிக்கல் பௌண்டீஷன் மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறகட்டளை மூலமாக முகாம் நடந்துவருகிறது.
- சென்னை அண்ணாநகர் என்னும் இடத்தில் பலத்த மழை காரணமாக மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளித்தது. பொதுமக்கள் சாலையில் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். ஆகையால் நமது ABVM தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் நேரில் சென்று மழைநீரை அப்புறப்படுத்தினார்.அதன்பிறகு பொதுமக்கள் சாலையில் செல்வதற்கு சிரமம் இல்லாமல் இருந்தது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
- மதுரையில் நடந்த இணையதளம் துவக்க விழா மற்றும் சுயம்வரம் நிகழ்ச்சி மிகசிறப்பாக நடந்தது என்பதற்காக விஸ்வகர்மா சனாதன தர்மா அரகட்டளை மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்களுக்கு கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த சிற்பி K. சதீஸ் ஆச்சாரியா அவர்கள் வாழ்த்து தெரிவித்து அனுப்பிய கடிதம்.
- மதுரை விஸ்வகர்மா விவாகம் இணையதளம் வெளியீட்டு விழா,
- ஓசூர் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, நாள் : ௦2.10.2015, இடம்: ஓசூர்.
-
11.10.2015 அன்று மதுரை நமது விஸ்வகர்மா விவாகம் இணையதளம் வெளியீட்டு விழா, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் சுயவரம் நிகழ்சிகள் நடந்தது அதில் முதன்மை விருந்தினராக தெலங்கான சட்டசபை சபாநாயகர் திரு. சிரிகொண்டா மதுசூதன சாரி அவர்கள் மற்றும் தலைமை D. முருகசெல்வம் கலந்துகொண்டார் என்பதை பெருமையுடன் மற்றும் மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மற்றும் ABVM உறுபினர்கள், விஸ்வகர்மா பொது மக்கள் கலந்துகொண்டனர்.
- அருள்மிகு ஸ்ரீ பொன் சனீஸ்வரன் திருக்கோயில்.
-
நமது ABVM பொநமது ABVM பொது செயலாளர் திரு. D. முருகசெல்வம் அவர்களின் தலைமையில் ஸ்ரீ சுயம்பு காளியம்மன் ஆலயம் மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் . நமது பொது செயலாளர் கலந்துக்கொண்டு சிறப் பித்தார்.
-
அருள்மிகு மிருதுபாத நாயகி உடனுறை ஸ்ரீ அக்னீஸ்வர சுவாமி திருகோயில், திருகொல்லிக்காடு. திருகோயிலில் 2015 - ம் வருடம் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி புதன்கிழமை அன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இத்திருப்பணியில் திருப்பணிச்செம்மல் D. முருகசெல்வம் அவர்கள் அணைத்து உதவிகளை செய்து திருப்பணிகள் முழுமையாக நடைப்பெற நல் உதவிகள் செய்தார். எனவே பக்த கோடிகள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு அருள்மிகு மிருதுபாத நாயகி அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோயில் (சனீஸ்வரன் பகவான் திருக்கோயில்) அருள் பெற வேண்டி அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
- திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிகழ்த்தும் ஸ்ரீ விராட் விஸ்வகர்ம காயத்ரி ஹோமம், ஸ்ரீஸ்ரீ விராட் போத்தலூர் வீரப்பிரம்மேந்திர, ஸ்ரீஸ்ரீஸ்ரீ கோவிந்தம்மாள் அவர்களின் திருக்கல்யாணம் மகோத்ஸவம். இடம்:- மஹதி ஆடிட்டோரியம், திருப்தி. நாள்:- 22.05.2015. வெள்ளி கிழமை.விழாவில் நமது விஸ்வகர்ம தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் சிறபித்தார். நமது விஸ்வகர்ம மக்கள் அனைவரும் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
- திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிகழ்த்தும் ஸ்ரீ விராட் விஸ்வகர்ம காயத்ரி ஹோமம், ஸ்ரீஸ்ரீ விராட் போத்தலூர் வீரப்பிரம்மேந்திர, ஸ்ரீஸ்ரீஸ்ரீ கோவிந்தம்மாள் அவர்களின் திருக்கல்யாணம் மகோத்ஸவம். இடம்:- மஹதி ஆடிட்டோரியம், திருப்தி. நாள்:- 22.05.2015. வெள்ளி கிழமை.
இந்த விழாவில் நமது விஸ்வகர்ம தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.
- நமது முதல்அமைச்சர் அம்மா அவர்களுக்கு தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் மற்றும் அகில பாரத விஸ்வகர்ம மகாசபா வின் சார்பாக வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
- குடியாத்தம் காளிகாம்பால் கோயிலில் நமது ABVM பொது செயலாளர், தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்களை வரவேற்று கும்பாபிஷேகம் நடத்தி குடுக்கும்படி ABVM நிர்வாகிகள் திரு. ராஜேந்திரன் , திரு. ராஜ்குமார் மற்றும் உறுபினர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
- விஸ்வசாந்தி விஸ்வகர்ம மஹா யாகம்.
- வாணியம்பாடி யை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு சர்க்கரை நோய் உள்ளது. அந்த சிறுமிக்கு நமது ABVM பொது செயலாளர் மற்றும் தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் அந்த குழந்தையின் மருத்துவ உதவிகள் அனைத்தும் அமிர்தம்மை மருத்துவமனை சேர்த்து மருத்துவ உதவி செய்து தருகிறார்.
- கார்க்ளா என்னும் இடத்தில் நமது விஸ்வகர்ம மக்களுக்கு ஒரு காமாச்சி அம்மன் கோயில் உள்ளது, அந்த ஊரில் 2௦௦௦ குடும்பங்கள் விஸ்வகர்மா மக்கள் வாழ்கின்றனர். 4 ஏக்கரில் காமாச்சி அம்மன் கோயில் உள்ளது. 1௦௦௦ பேருக்கு திருமணம் செய்யும் அளவுக்கு திருமன மண்டபம் உள்ளது. 1௦௦௦ பேர் அமர்ந்து உணவு உன்ன உணவு விடுதி கட்டியுள்ளனர். அங்கு சமையல் அரை நவீன முறையில் உள்ளது. என்பதை மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் தெரிவித்துகொள்கிறோம்.
- நமது ABVM பொது செயலாளர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் தனபாலன் கல்வி அறக்கட்டளை யின் 14 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் சிறப்பு வரவேற்ப்பு அளித்து, குத்துவிளக்கு ஏற்றி , நர்சிங் முடித்த பெண்களுக்கு பட்ட படிப்பு சான்றிதழ் வழங்கினர் . விழாவில் கலந்துகொண்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்
- விஸ்வசாந்தி விஸ்வகர்ம மகாயாகம் நமது ABVM பொதுசெயலாளர் பிரம்மஸ்ரீ
- SKF நிறுவன குழு (2014 க்கான) விருது வழங்கும் விழா
- நமது ABVM பொது செயலாளர் அவர்களுக்கு சிறந்த தொழில்அதிபர் என்று மூட்பிடிரி என்னும் இடத்தில் SKF அவார்ட் வழங்கஉள்ளனர்.
- M.S. விஸ்வநாதன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா. (சிறப்பு பேச்சு - D. முருகசெல்வம்).
- இன்று சனிப்பெயர்ச்சி முன்னிட்டு திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரன் கோயில் நமது ABVM பொது செயலாளர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் 20,000 பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். பொது மக்கள் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
- அகில பாரத விஸ்வகர்ம மகா சபா, ஓசூர்.
முதலாம் ஆண்டு விஸ்வ பிரம்ம மஹா யாக பூஜை நடந்தது. நமது விஸ்வகர்ம தேசிய தலைவர் மற்றும் பொது செயலாளர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
- அகில பாரத விஸ்வகர்ம மகா சபா வின் தேசிய தலைவர் திரு. D. முருகசெல்வம் ஆச்சாரி அவர்கள் சேலம் ஆத்தூரில் திரு. பொன் அருணாச்சலம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் k. சுப்ரமணியன், M. காமராஜ், மற்றும் R. நடேசன் பலர் மகிழ்ச்சியுடன் வரவேற்று, சுவாமி விவேகானந்தர் தனியார் பள்ளி, நரசிங்கபுரம், ஆத்தூர், சேலம். பள்ளியில் படிக்கும் மாணவ செல்வங்களை சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாடினார். மற்றும் அப்பள்ளியின் தாளாளர் விஸ்வகர்ம சமூதாயத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி கற்றுத்தருமாறு உறுதி அளித்தார். அதற்க்கான செலவுகளை ABVM ஏற்றுக்கொல்லும் என்பதை தலைவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொண்டார்.
- அகில பாரத விஸ்வகர்ம மகாசபா வின் தேசிய தலைவர் D. முருகசெல்வம் அவர்கள் விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை மூலம் திருநெல்வேலி மாவட்டம், கயத்தார் சேர்ந்த செல்வி T. பூமாரி க்கு( PSN பொறியியல் கல்லுரி யில் முதலாம் ஆண்டு) கல்வி உதவி தொகை வழங்கியமைக்கு அவரும் அவருடைய தாயார் திருமதி. செல்வநாயகம் அவர்களும் நன்றி தெரிவித்தனர். அருகில் தமிழ்நாடு தலைவர் மற்றும் நிர்வாகிகள்.
- விஸ்வகர்ம உச்சினிமாகாளி அம்பாள் திருகோவில் நூதான விமானகோபுர ஸஹித ஜிர்னோத்தாரண, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ் . நாள்: வைகாசி 29 தேதி ( 12.06.2014 ) வியாழன். நேரம் : காலை 9.௦௦ மணிக்கு மேல் 9.48. மணிக்குள் .
- விஸ்வப்பிரம்மா திருக்கனித பஞ்சாங்கம் வெளியீடு விழா.
- சிவா நாட்டிய நடனப் பள்ளியின் 15௦ வது அரங்கேற்ற விழாவில், நமது அகில பாரத விஸ்வகர்ம மகா சபை தலைவர் D. முருகசெல்வம் அவர்கள் கலந்துகொண்ட போது எடுத்த படம் அருகில் தேனிசை தென்றல் தேவா, கவிஞர் ரவி பாரதி, கலைமாமணி திருமதி. பார்வதி ரவி கண்டசாலா, கலைமாமணி. தஞ்சை. A. நடராஜன், திரு. G.K, நடனப் பள்ளியின் நடத்தும் திருமதி. சைலஜா அவர்கள் செயலாளர் வெங்கடேஷன் மற்றும் மாணவிகள்.
- சிவா நாட்டியாலைய நடன பள்ளி வழங்கும் பாரதநாட்டிய அரங்கேற்றம் . தேதி : 27 th ஏப்ரல் 2014, (ஞாயிரு ) நேரம் : 10 Am to 1.00 Pm.
- திருநெல்வேலி மாவட்டம் அதாளநல்லூர் - கொட்டாரக்குறிச்சி கிராமம், ஸ்ரீ சுடலை மாடசுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்.
- செல்வி. B.K. ஆர்யா , பன்னிரெண்டாம் வகுப்பில் 95 சதவீதத்திற்கு மேல்,(2014 - 2015),இந்திய பொருளாதார சேவை (IES) தேர்ச்சி பெற்றவர்.
- விஸ்வகர்ம சமுதாயத்தை சேர்ந்த செல்வி. NM. திவ்யா,(கேரளா) நகை செய்யும் தொழில் சார்ந்த படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அவர்களுக்கு ஸ்ரீ வணப்பாமால ராட்டைய்யா விருது கிடைத்துள்ளது.
- சிதம்பரம் விஜய் ஜேம்ஸ் திறப்பு விழா தலைவர் D. முருகசெல்வம் துவக்கி வைத்தார்.
- தலைவர் D. முருகசெல்வம் அவர்களின் குடும்பத் திருமண விழாவில் கலந்துகொண்ட அகில பாரதிய விஸ்வகர்மா மஹா சபா குழு.
- சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம்மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் மற்றும் ஸ்ரீ காளிகாம்பாள் கவிமாலைஇசை குறுந்தகடு வெளியீட்டு விழா .
- விஸ்வகர்ம பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்க உதவித்தொகை வழங்கும் 11ஆம் ஆண்டு விழா
- விஸ்வகர்மா ஜெயந்தி விழா (நாகர்கோயில்)
- விஸ்வகர்மா ஜெயந்தி விழா (கன்னியாகுமரி) நிறுவனர் தலைவர் D. முருகசெல்வம் துவக்கி வைத்தார் .
- விஸ்வகர்ம வரன்களுக்கு நவீன சுயம்வரம்
- நலத்திட்ட உதவிகள்
- விருதுகள்
- கருத்து பரிமாற்றத்திற்கான சிங்கப்பூர் மற்றும் பாங்காக் பயணம்