தெய்வீகப் பாரம்பரியம் கொண்ட சமுதாயம் நமது விஸ்வகர்ம சமுதாயம் என்பது நம்மையெல்லாம் பெருமையும் பூரிப்பும் அடையச் செய்யும் ஒரு செய்தியாகும்.
விஸ்வகர்மா என்பது ஒரு சாதிப் பெயரல்ல. விஸ்வகர்மக்களை பௌஷ்ய பிராம்மணர்கள் என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. படைப்பாற்றல் கொண்டவர்கள் என்பது இதற்குப் பொருள். விஸ்வ பிராம்மணர்கள் / பௌஷ்ய பிராம்மணர்கள் / படைப்பாளிகள் என்ற முறையில் சமுதாயத்தின் அனைத்து சாதிப் பிரிவுகளிலும் பிறந்திருந்தாலும், இந்தியாவில் சாதி பிரிவு முறை ஏற்பட்டபோது விஸ்வகர்ம பிராம்மணர்கள் பிறப்பால் ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப் படுத்தப் பட்டார்கள்.
விஸ்வகர்மா என்ற பெயர் கொண்ட இறைவன் தனது ஐந்து முகங்களிலிருந்து ஐந்து பிரஜாபதிகளை (அரசர்களை) உருவாக்கினார் என்கின்றன வேதங்கள். சத்யோஜம், வாமதேவம், அகோரம், ஈசானம், ஊர்தம் என்பவர்களே அந்த பிரஜாபதிகள். மனு, மயா, துவஷ்டா, சில்பி, விசக்ஞா, என்றும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
சில்பி விஸ்வகர்மா கடவுளர்களுக்கான தேரையும், ஆயுதங்களையும் செய்பவர் என்றும், விஸ்வகர்ம துவஷ்டர், இந்திரனின் வஜ்ராயுதம் போன்ற ஏவுகணைகளை உருவாக்கினர் என்றும் வேதங்கள் குறிப்பிடுகின்றன.
காலப்போக்கில் விஸ்வகர்மா என்கின்ற இந்த உன்னதமான படைப்பாளிகள் குறிப்பிட்ட ஒரு சாதியராக வகைப்படுத்தப்பட்டு விட்டனர்.