விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

எம்மைப் பற்றி

இந்த அறக்கட்டளையின் நிறுவனர், தலைவர் ஆன திரு. முருகசெல்வம் அவர்களைப்பற்றி;

இவர் மருத்துவமனைகள் மூலமாக மாவட்டந்தோறும் மருத்துவ முகாம் நடத்துகிறார். தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளையின் சார்பில் ஏழை பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறார்.

நமது விஸ்வகர்ம சமூகத்தின் வரலாற்றுப் பூர்வமான அருமை பெருமைகளை நம்மில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

பல சாதனையாளர்களை உடைய சமுதாயம் என்றாலும் கூட, காலச்சூழல்களில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களால் நம்மவர்களுக்கு நியாயமாக கிடைக்கக்கூடிய பல்வேறு சலுகைகள் ஜனநாயக அடிப்படையில் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகின்றன என்பது உண்மை.

இந்தக் குறைகளையெல்லாம் களைய நமது உரிமைக்காகவும், உயர்வுக்காகவும், பாடுபடும் பொருட்டு, எல்லாம் வல்ல வேதாந்த சொரூப ஸ்ரீ விராட் விஸ்வகர்ம பரப்ரம்மத்தின் திருவருள் துணையுடன் விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.

விஸ்வகர்ம சமுதாய மக்களின் மேம்பாட்டிற்காகவும், பொது மக்கள் மத்தியில் நமது சமுதாயத்திற்கான கௌரவத்தைப் பெற்று தருவதற்கும் இவ்வறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.