விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

ஆதீனம்

எழுச்சியோடும் பொலிவோடும், உயிர்ப்பாக, விஸ்வ பிராஹ்மண பண்பாட்டு கூறுகள் அழிந்துவிடாமல் காத்துக் கலங்கரை விளக்கங்களாகத் திகழ்ந்து வழிகாட்டிவரும் மடங்களூள் முதலிடத்தைப் பெறும் மடங்களில் ஒன்றாக தமிழ் நாட்டில் திருவண்ணாமலை மஹாக்ஷேத்ரத்திற்கு அருகே அமைந்துள்ள ஜகத்குரு ஸ்ரீ ஆதி சிவலிங்காச்சார்ய மடாலயமும், மற்றொன்று திருநெல்வேலி பரசமய கோளரி நாத ஆதினமும் திகழ்கிறது.

சீனந்தல் மடம்

தெய்வத்தமிழ் நாட்டில் ஜவ்வாது மலைத் தொடரில் கிழக்கு அடிவாரத்தில் பஞ்சபூத ஆலயங்களில் ஒன்றான திருவண்ணாமலை க்ஷேத்ரத்திற்கு வடக்கே 42 கி.மீட்டர் தொலைவிலும் படவேடு என்கிற கிராமத்திற்கு தெற்கே 30 கி.மீட்டர் தொலைவிலும் போளூர் என்கிற நகருக்கு மேற்கே 22 கி.மீட்டர் தொலைவிலும், ஜவ்வாது மலைத் தொடரின் கிழக்கு அடிவாரத்திலும் மிருகண்ட ஆற்றின் கிழக்கு கரையிலும், பர்வத மலையின் அடிவாரத்திலும், காந்தபாளையம் என்னும் பெரியதொரு கிராமத்திற்கு அடுத்ததாகவும் சீனந்தல் என்கிற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் வரும்.

இக்கிராமத்தில் அமையபெற்ற மடமே “சீனந்தல் மடம்” என்று பெயர் பெற்றது.

ஸ்ரீ பரசமய கோளரிநாத மடம்

கி.பி. 6-ம் நூற்றாண்டில் தென் தமிழ் நாட்டின் வற்றாத வளம் கொழிக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு அருகில் அருள்மிகு காந்திமதி அம்பாள் சமேத அருள்மிகு நெல்லையப்பர் – ஸ்வாமி சன்னதிக்கு வடக்கே ஸ்ரீ அனவரத சௌந்தரராஜ பெருமாள் சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட ஆதீனம் தான் ஸ்ரீமத் பரசமய கோளரிநாத ஆதீனம். இவ்வாதீனம் எல்லா சமயங்களுக்கும் தலைசிறந்த சிங்கமாக விளங்குவதால் பரசமய கோளரிநாத மடம் என பெயர் பெற்றது. (பரசமய என்றால் எல்லா சமயங்கள் என்றும், கோளரி என்றால் சிங்கமாக என்றும் பொருள்படும்.)