விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

அறக்கட்டளையின் நோக்கங்கள்
 • உலகில் முதன்முறையாக ஸ்ரீ விராட் விஸ்வகர்ம பரப்ரம்மத்தின் திருக்கோவில் நிறுவுதல்.
 • சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீ விராட் விஸ்வகர்ம பரப்ரம்மத்திற்காக திருக்கோயில் கட்டுதல்.
 • இவ்வறக்கட்டளையின் ஓர் அங்கமான www.shrushtimatrimony.com இணையதளத்தில் தங்களுடைய / மகள் / மகன் ஜாதகங்களை பதிவு செய்து அதற்கு பொருத்தமான ஜாதகக் குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கமும் செய்துக் கொள்ளலாம்.
  www.viswakarmatrust.org இணையத்தின் வாயிலாக அறக்கட்டளையின் செயல்பாடுகளையும் அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளலாம், தங்களின் மேலான கருத்தினையும் ஆலோசனைகளையும் இவ்விணையதளத்தில் பதிவு செய்யலாம்.
 • சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட காலி மனைகளில் கல்வி நிறுவனங்கள் அமைத்து தருதல்.
 • மாத இதழ் ஒன்றைத் தொடங்கி, நமது சமுதாய மக்களின் படைப்புகளையும் மற்றும் பாரம்பரிய பெருமைகளையும் எடுத்துக்கூறுதல்.
 • முக்கிய தொலைகாட்சிகளில் நமது சமுதாய ஆன்மிக நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பு செய்தல்.
சமுதாயப்பணிகள்
 • ஆதீனத்தின் சார்பில் முக்கிய நகரங்களில் வேத பாடசாலை அமைத்தல்.
 • தமிழகம் முழுவதுமுள்ள விஸ்வகர்ம சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட திருக்கோயில்களைப் புதிப்பித்து, திருப்பணிகள் செய்வித்தல்.
 • நமது முன்னோர்களின் அரிய தகவல்கள், அவர்கள் செய்த செயற்கரிய செயல்கள், இலக்கிய பெரும் பணிகள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து இன்றைய இளைய தலைமுறைகளுக்கு வழங்கி அவர்களை மேலும் சிறப்புள்ளவர்களாக உருவாக்குதல்.
 • ஐந்தொழிலில் சிறந்த வல்லுநர்களை தேர்ந்தெடுத்து சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்து மேலும் பல சிறப்புகளைப் பெற ஊக்குவித்தல்.
 • நமது சமுதாயத்தில் இலக்கியம், அறிவியல், கலை, பண்பாடு, இசை, அரசியல், சமயம்
  இன்னபிற துறைகளில் சாதனை புரிந்தோரின் வாழ்கை வரலாற்றினை புத்தகமாக வெளியிடுதல்.
 • பொருளாதாரத்தில், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின் தங்கியிருக்கின்ற மகளிர்,
  சிறுவர், சிறுமியர், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் நலனிற்காகவும் மேம்பாட்டிற்காகவும் உதவுதல்.

அரசிடமிருந்து பல்வேறு சலுகைகளையும் நம்மவர்களின் வாரிசுகளுக்கு பெற்று தந்து அரசின் நிர்வாகம், மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல், போன்ற பல்வேறு துறைகளிலும் அவர்கள் உயர்ந்த நிலையை பெற வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்திலும் அதற்கான ஆக்கப்பூர்வமான பல்வேறு உதவிகளை செய்து தரும் நோக்கத்திலும் இந்த விஸ்வகர்ம சனாதன தர்ம ஆறக்கட்டளை துவக்கப்பட்டுள்ளது.

கல்வி சார்ந்த உதவிகள்

நமது பிள்ளைகளை சமுதாயத்தில் உயர்நிலை அதிகாரிகளாக, அதாவது ஐ.ஏ. எஸ்., ஐ.பி. எஸ்., அதிகாரிகளாகவும், சிறந்த மருத்துவர்களாகவும், சிறந்த பொறியாளராகவும், மிகச்சிறந்த வழக்கறிஞர்களாகவும், கல்வியாளர்களாகவும், சிறந்த மனிதர்களாகவும் உருவாக்கப் பாடுபடுதல்.

இந்திய அரசு துறை நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் நம் மாணவர்களும் பங்கேற்று வெற்றி பெற, பேராசிரியர்களும், ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரிகளாக நம்மவர்களைக் கொண்டு பயிற்சி பட்டறை நடத்துதல்.

விஸ்வகர்ம இளைஞர்களை ஐ.ஏ. எஸ்., ஐ.பி. எஸ்., தேர்வுகளை எழுதச் செய்யவும், தெரிவு செய்யப்படும் நிலைக்கு ஊக்கமும், பயிற்சியும், ஆக்கமும் ஆளித்திடவும், இவ்வறக்கட்டளை முன் வந்துள்ளது. இந்தியன் ஐ.ஏ. எஸ், ஆகாடமியின் நான்கு கிளைகளில் சேரும் விஸ்வகர்ம இளைஞர்களுக்கு இதற்கான பயிற்சிக் கட்டணம், உண்டுறைக் கட்டணம், நூல்கள் வாங்குவதற்கான செலவினங்கள் ஆகியவற்றுக்கு உதவிட இவ்வறக்கட்டளை முன் வருகிறது. இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி முன்னேற ஆர்வமும் தேர்வு எழுதத் தகுதியும் உள்ள விஸ்வகர்ம வகுப்பு இளைஞர்கள் கீழ்க்காணும் முகவரிகளில் தொடர்பு கொள்ளவும்.